மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் பிரதானமாக ஓடுபவர் களுடன் பேஸர்(pacer) எனப்படும் துணை ஓட்டக் காரர்களும் இருப்பர். இவர்கள் பிரதான ஓட்டக்காரர் பந்தயத்தை எவ்வளவு நேரத்தில் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்த நேர அளவிற்கேற்ப அவர்களுடன் ஓடி அவர்களை உற்சாகப்படுத்துவர். இதனால் ஓட்டக்காரர் எந்த வேகத்தில் ஓட வேண்டும் என்று யோசிக்க வேண்டியதில்லை. திடீரென வேகம் எடுக்க வேண்டியதில்லை. மொத்த தூரமான 26.2 மைலை 2 மணி நேரத்திற்குள் இதுவரை யாரும் முடிக்கவில்லை. இது குறித்த ஆய்வில் துணை ஆட்டக்காரர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவில் ஓடினால் பிரதான வீரர் மீது ஏற்படும் காற்றின் இழுவை குறைந்து அவர் சில நிமிடங்கள் குறைவாகவே பந்தயத்தை முடிக்கலாம் என்று காட்டப்பட்டுள்ளது. கென்யா நாட்டை சேர்ந்த நீண்ட தூர ஓட்ட வீரர் எலூய்ட் கிப்சோகே ஒரு சோதனை முயற்சியாக துணை வீரர்களை முன்பக்கம் வி வடிவிலும் பின்பக்கம் இரண்டு வீரர்களையும் ஓட செய்து காற்று இழுவையை குறைத்து இரண்டு மணி நேரத்திற்குள் மாரத்தான் பந்தயத்தை முடித்தார். இப்போது அதையே பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இயந்திர பொறியாளர் மாஸ்ஸிமோ மாரோ மற்றும் அவரது குழுவினரும் காற்று சுரங்கம் ஒன்றில் சிறு மனித பொம்மைகளை வெவ்வேறு வடிவங்களில் அமைத்து அவற்றின் மீது காற்றின் இழுவை கணக்கிட்டனர். வி வடிவில் கிப்சோகே செய்த பரிசோதனையால் அவர் மூன்று நிமிடங் கள் குறைத்தது தெரியவந்துள்ளது. இதையே t வடிவில் செய்தால் இன்னும் ஒரு நிமிடம் குறைக்கலாம் என்றும் காணப்பட்டது.